2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

சடலத்தைப் பொறுப்பேற்கவும்

செல்வநாயகம் கபிலன்   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காய்ச்சல் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 4ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட முதியவர் நேற்று (16) காலை உயிரிழந்துள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள்  தெரிவிக்கின்றது

தவசிக்குளம் - மிருசுவில் பகுதியைச் சேர்ந்த கணபதி செல்வராசா (வயது 56) என்ற முதியவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குறித்த வயோதிபரை, உறவினர்கள் யாரும் வந்து பார்த்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி உயிரிழந்த முதியவரின் சடலத்தைப் பொறுபேற்றுக்கொள்ளுமாறு, உறவினர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .