2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

சடலம் அடையாளம் காணப்படவில்லை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்க,  புதன்கிழமை (04) இரவு பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் இரவு 10.15 மணியளவில் தாரபுரம் பகுதியில் உள்ள 312 ஆவது மைக்கல் தொலைவில் உள்ள காங்கியடி சிறி முத்துமாரி ஆலயத்திற்கு தொலைவில் இளைஞர் ஒருவர் புகையிரத்தில் மோதி உயிரிழந்தார்.

குறித்த இளைஞனின் சடலம் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞன், நீல நிற டெனிம்; ஜீன்ஸ் மற்றும் கறுப்பு நிற செக் சேட் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம், இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .