2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சட்ட ஆலோசகர் பதவி நீக்கம்

Editorial   / 2020 ஜூன் 24 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர சபையின்  சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின், அப்பதவியில் இருந்து, இன்று (24)  நீக்கப்பட்டுள்ளார்.

அவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள நிலையில், தனது தேர்தல் பிரசாரங்கள், பேஸ்புக் ஊடாக,  மாநகர சபை தொடர்பிலும் அதன் உறுப்பினர்கள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் முன்வைப்பதாக, சபையில், அண்மையில்  பிரஸ்தாபிக்கப்பட்டது.

அவரை  மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென, கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X