Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமாகான சபை உறுப்பினர்களும் அமைச்சர்களும், மாகாணச் சட்டங்களை கற்க வேண்டுமென, வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில், இன்று (26) நடைபெற்றது. இதன் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னமும் பல நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை.
“உறுப்பினர்கள், மாகாணச் சட்டங்களைக் கற்று, தங்கள் அதிகாரம் என்ன, எல்லை என்ன என்பதை, முதலில் அறிய வேண்டும். அதன் பின்னர், அதற்குள் நின்று நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டும்.
“நியதிச் சட்டங்களை, மற்றைய மாகாண நியதிச் சட்டங்களைப் பெற்று, அதனை எமது மாகாணத்துக்கு ஏற்றவாறு மாற்றி உருவாக்கலாம். அதனைக் கூடச் செய்யாது, கால தாமதபடுத்திக் கொண்டு உள்ளோம்” என்றார்.
மேலும், “தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்படும் தகவலுக்கு, பிழையான தகவல்களை அதிகாரிகள் தருகின்றனர்.
“வடமாகாண திணைக்கள அதிகாரிகள், தமது சொந்தப் பாவனைக்காக திணைக்கள வாகனங்களை பயன்படுத்துகின்றார்கள். அது தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் பெற, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக குறித்த திணைக்களங்களை கேட்டபோது, அவர்கள் தவறான தகவல்களையே தருகின்றார்கள்” எனவும் தெரிவித்தார்.
2 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025