2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்’

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில், சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமென, யாழ். மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சட்டவிரோதமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமேயானால் பொதுமக்கள் தங்களுக்கு உரிய தகவல்களை வழங்கும் இடத்தில், தாங்கள் அதனை பொலிஸாருடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்றார்.

அத்துடன், சம்பந்தப்பட்டவர்களுக்குரிய நடவடிக்கையையும் உடனடியாக தாங்கள் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

“இராணுவத்தினரால் பொதுமக்களுக்கான சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பாதுகாப்பு படையினர் மக்களுக்கு  சமூக வேலைத்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறான ஒரு வேலைத்திட்டங்களில் ஒன்றுதான் இந்த வறிய மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் பணியாகும்” எனவும் கூறினார்.

இன்றுவரை 710 வீடுகளுக்கும் மேல் தாங்கள் வறிய மக்களுக்கு அமைத்துக் கொடுத்திருப்பதாகத் தெரிவித்த அவர், அதேபோல் மேலும் இன்னும் இரண்டு மாதங்களில் இருபது வீடுகள் நாங்கள் கட்டி முடித்து உரிய மக்களுக்கு வழங்கி வைக்கவுள்ளோமெனவும் கூறினார்.

“அத்தோடு, நாங்கள் பொதுமக்களுக்கான பல்வேறுபட்ட சமூக வேலைத் திட்டங்களை நாங்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X