Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 06 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
யாழ்ப்பாணம் - அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவற்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரியாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று(06) நேரடியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇ சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்றைய விஜயம் அமைந்திருந்த நிலையில், சட்ட விரோத மணல் அகழ்வு முற்றாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின், பாதுகாப்பு தரப்பினர் காவலரன்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் எனறு பிரதேச மக்களினால் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய அமைச்சர், அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சட்டவிரோத மணல் அகழ்வை முழுமையாகக் கட்டுப்படுத்துமாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
52 minute ago
56 minute ago