2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 12 பேர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் 12 பேர், நாச்சிகுடா கடல் பகுதியில் வைத்து நேற்று (09) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய படகுகள் மூன்று, சட்டவிரோத வலைகள் ஐந்து, வெடித் தூண்டிகள் 17, வெடி நூல் துண்டுகள் 17, நீர் முழ்கி முகமூடிகள் எட்டு, நீர் முழ்கி காலணிகள் எட்டு, ஜிபிஎஸ் இயந்திரங்கள் 3 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள், பொருட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக விடத்தல்தீவு கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .