2025 மே 03, சனிக்கிழமை

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மீட்பு

Princiya Dixci   / 2022 ஜூலை 05 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, பூநகரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட  கௌதாரிமுனை, வெட்டக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒருதொகை மஞ்சளும் கிருமிநாசினியும், நேற்றிரவு (04) 11 மணியளவில் இராணுவத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளன.

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், 66ஆவது படைமுகாம்களின் இராணுவத்தினரால் அவை மீட்கப்பட்டு, பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சுற்றிவளைப்பில் 65 பெரிய உரைப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோகிராம் மஞ்சளும், 03 பைகளில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ் மஞ்சள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதனுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X