2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சந்தேகநபரை அடையாளம் காட்டியபெண்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 06 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

துவிச்சக்கரவண்டியில் சென்ற பெண்ணை வழிமறித்து, அவர் அணிந்திருந்த தாலிக்கொடியினை அபகரித்த கொள்ளைச்சந்தேக நபரை வியாழக்கிழமை (05) இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது, பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர்; மாதம் 14ஆம் திகதி, கைதடி கிழக்கு வீதியில், துவிச்சக்கரவண்டியில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மறித்து, அவர் அணிந்திருந்த தாலி கொடியினை அபகரித்து சென்றிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட நபர் அச்சுவேலி பொலிஸாரினால் பிறிதொரு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, அவர் அழித்தவாக்கு மூலத்தில் மேற்படி கொள்ளை தொடர்பில் தகவல்களை பொலிஸாருக்கு வழங்கியிருந்தார்.

இதனையடுத்து குறித்த நபரை அச்சுவேலி பொலிஸாரிடம் இருந்து பொறுப்பேற்ற சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை (05) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X