2025 ஜூலை 02, புதன்கிழமை

சந்திப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான டிசந்திப்பொன்று, கிளிநொச்சியில் இன்று (15) நடைபெற்றது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் எதிர்நோக்குகின்ற பௌதீக வளத் தேவைகள் தொடர்பாகவும் அதிபர்கள் பாடசாலைகளை முன்கொண்டு செல்வதற்கு ஏற்படுகின்ற வரையறைகள், மட்டுப்பாடுகள், அதை நிவர்த்திப்பதற்கான வழி வகைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறான தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் அதிபர்களால் எடுத்தரைக்கப்பட்டது.

அத்துடன், அதிபர்களின் கருத்துகளை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், எதிர்காலத்தில் குறிப்பிட்ட இடர்பாடுகளை தன்னால் இயன்றளவில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்டத்தினுடைய கல்வியை முன்னகர்த்திச் செல்வதற்கு குறித்த அதிபர்களின் பங்களிப்பு அளப்பரியதாகக் காணப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .