2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சந்தையில் கண்ணிவெடிகள் விழிப்புணர்வு

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கண்ணிவெடிகள் விழிப்புணர்வுச் செயற்பாடு ஒன்று, கிளிநொச்சி பொதுச் செந்தையில் இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.

ஏப்ரல் 4ஆம் திகதி சர்வதேச கண்ணிவெடிகள் செயற்பாட்டுத் தினமாகும். அதனையொட்டியே, சமூக நல்லிணக்கத்துக்கான டெல்வோன் உதவி அமைப்பு (Delvon Assistance For Social Harmony) கிளிநொச்சி, கரைச்சி பொது சந்தையில் கண்ணிவெடிகள் தொடர்பான விழிப்புணர்வை முன்னெடுத்தது.

கண்ணிவெடிகள் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற எண்ணக்கருவில், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் இவ்வாறான  நடவடிக்கைகைளை முன்னெடுப்பதாக, மேற்படி அமைப்பினர் தெரிவித்தனர்.

அதேவேளை, இச் செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் கிராமங்கள்  தோறும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X