Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நிதர்ஷன்
வலிகாமம் கிழக்கில் இருந்து சந்நிதி கோவில் வளாகத்தை அடையும் தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணை பாலத்தினூடான போக்குவரத்து கதவுகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ், உற்சவத்தை முன்னிட்டு இப்பகுதியூடாக கோவிலை வந்தடையும் பக்தர்களுக்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சந்நிதி முருகன் கோவிலின் வருடாந்த உற்சவத்தின் போது, வருடா வருடம் தொண்டமானாறு உவர் நீர்த்தடுப்பணை பாதை ஊடாக போக்குவரத்து அனுமதிக்கப்படுவது வழமையாகவுள்ளதாகவும் இந்த வருட உற்சவத்தில், ஆறு நாள்கள் முழுமையாக இப்பகுதி ஊடான போக்குவரத்துக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் உடன்பட்டிருந்தாகவும் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே, பாலத்தின் ஊடாக பக்கதர்களின் போக்குவரத்து பாதைத திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த வருட உற்சவக் காலத்தில், மூன்று நாள்களே இப்பாதை திறந்து விடப்பட்ட நிலையில், இம்முறை ஆறு நாள்களுக்கு இப்பாதை திறந்துவிடப்படவுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, சந்நிதி உற்சவ ஏற்பாட்டுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு இணங்க, தனியார் வாகனத் தரிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அரச, தனியார் வாகனங்கள் தரித்து நின்று பக்தர்களை ஏற்றிச் செல்வதற்கான உரிய ஒழுங்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன், வாகன நெரிசலைக்கட்டுப்படுத்தும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எல்லையூடாக கோவிலை வந்தடையும் வாகனங்களுக்கு, ஒருவழி போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து பொலிஸாருக்குக் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
4 hours ago
4 hours ago