2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சபை அமர்வுக்கு செல்லாமல் ஆலோசனை

George   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் அமர்வு வியாழக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போதும், சபையை கூட்டாது சில உறுப்பினர்கள் குழுவாகப் பிரிந்து வெளியில் நின்று ஆலோசனை செய்தனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (25) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. எனினும், அந்த நேரத்தில் சபை அமர்வு ஆரம்பமாகாமல் உறுப்பினர்கள், சபை மண்டபத்துக்கு வெளியில் கூடி ஆலோசனை செய்தனர்.

வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அவர் மீது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த சபை அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அந்தப் பிரேரணையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கோரி முதலமைச்சரால் 8 உறுப்பினர்களின் கையெழுத்துடன் இன்று பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

அதனையடுத்து, சபை அமர்வு ஆரம்பமாகாமல் உறுப்பினர்கள் தனியாக ஆலோசனை செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X