Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'சப்ரிகம' திட்டத்தில், எந்த விதிகளையும் மீறவில்லையெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், சட்டவரைபுக்குட்பட்டே திட்ட முன்மொழிவுகள் யாவும் நிதி அமைச்சின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
நிறைவான கிராமம் திட்டத்துக்கான சுற்றறிக்கையைப் பகிரங்கமாக மீறியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில், அங்கஜன் இராமநாதனிடம் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அனுமதியுடன் மக்கள் முன்மொழிவு திட்டங்களை நிதி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் குறித்த கால எல்லையில் இது இடம்பெறவேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இந்தத் திட்டவரைபுகள் அனுப்பிவைக்கப்பட்டு, நிதி விடிவிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.
மக்களின் பிரச்சினைகளை, களவிஜயத்தின் ஊடாக கண்டறிந்து, ஆராய்ந்ததன் பின்னரே, இந்தத் திட்ட வரைபுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவெனவும், அங்கஜன் இராமநாதன் கூறினார்.
நிலத் திட்டங்களில் சில மக்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனரெனவும் அவற்றை அராய்ந்து அவர்களையும் உள்வாங்கி, மக்கள் நலத்திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago