Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Niroshini / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
அரசியலமைப்பு மறுசீரமைப்பில் சமஷ்டி ஆட்சி முறைமை கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு வரப்படாவிட்டால் தனிநாட்டுக்கான வழியை நாங்கள் தொடர்வோம். அதற்கு உலக நாடுகளின் உதவி வேண்டும். ஏனெனில் எங்கள் போராட்டம் மௌனிப்பதற்கு இந்த உலக நாடுகளே காரணம் என பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பரிந்துரைகளை கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
'தமிழ் மக்களுக்கு உரிமைகள் தருவதாக கூறி செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களுமே ஒப்பந்தம் செய்தவர்களால் கிழித்தெறியப்பட்டன. நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம். இன்றும் எதிர்கட்சியிலுள்ள எமது அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்பட்டு வருவதை நாங்கள் பார்க்கின்றோம்' என்றார்.
'நாட்டில் இதுவரை கொண்டுவரப்பட அரசியலமைப்பு முறைகளில் தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படாமலேயே இருந்து வந்துள்ளது. தற்போது நாட்டில் புதிய அராங்கம் ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டுவரவுள்ளதாக கூறி அதற்கான கருத்துக்களையும் எங்களிடம் கேட்டு வந்துள்ளனர்.
இந்த அரசியல் அமைப்பில் நாங்கள் காலம் காலமாக வலியுறுத்தி வரும் சமஸ்டி, சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைவு போன்றவற்றையே இப்போதும் உங்களிடம் வலியுறுத்தியுள்ளோம். எமது கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது எமக்கான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
'கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்ட ஏமாற்று நடவடிக்கைகள் போன்று இம்முறையும் இந்த அரசாங்கமும் எம்மிடம் கருத்துக்களை பெற்று விட்டு எம்மை ஏமாற்றும் செயலில் இறங்குமாயின், எமது விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய சர்வதேச நாடுகள் எமக்கான தனி நாடான தமிழீழத்தை பெற்றுத்தர வேண்டும்.
மாறாக சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் எம்மை ஏமாற்றினால் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு அடிகோலும். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எமது தமிழ் இளைஞர்கள் தாமாக விரும்பி ஆயுதம் ஏந்தி போராடவில்லை. எமது மக்கள் அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதலிலேயே போராடினார்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago