2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமாதானத்தைக் கோரி தனிநபரால் போராட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடக்கில், சமாதானத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் தனிநபரொருவரால், போராட்டமொன்று இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரால், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில், காலை 9 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருக்கிறது எனவும், சமாதானத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவும், இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றனவெனவும் குற்றஞ்சாட்டினார்.

"கிழக்கில், சமாதான மாதா, மரண பங்கத்தில் இருக்கும் நிலையில் வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது ஆபத்தாகும்" என அவர் தெரிவித்ததுடன், எனவே, வடக்கில் சமாதானத்தைப் பாதுகாத்து உலக சமாதானம் உருவாக வேண்டுமெனவும் கூறினார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X