2025 ஜூலை 23, புதன்கிழமை

சமுர்த்திப் பயனாளிகளால் காரைநகர் பிரதேச செயலகம் முற்றுகை

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

சமுர்த்தி மீளாய்வின்போது நிராகரிக்கப்பட்ட பயனாளிகள், காரைநகர் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்தபோதும், தற்போது மேற்கொள்ளப்பட்ட மீளாய்வில், தமது பெயர்கள் தெரிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்தே, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, காரைநகர் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,  பிரதேச செயலக ஊழியர்களை உள்ளே செல்ல விடாது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு சென்ற சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அம்மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுடன் கலந்துரையாடி, உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .