Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 20 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
ஐ.நாவும் அது சார்ந்த நாடுகளும் இந்த சர்வதேச விசாணைக்காக தமது முன்னெடுப்புகளையும் ஆதரவுகளையும் வழங்குமாறு, தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரிப் பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் தெரிவித்தார்.
தொழிற்சங்க வாதி சின்னப்பொடி வேலுவின் 49ஆவது சிராத்த தினம், இன்று கொடிகாமத்தில், நினைவு கூரப்பட்டது.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த செ.மயூரன், தொழிற்ச்சங்கவாதியாக இந்தப் பிரதேசத்துக்கு வேலு ஐயா ஆற்றிய சேவை மிக அளப்பரியதெனவும் இவரது செயற்பாட்டால் பல இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
“இன்று நாட்டின் நிலமைகள் தொடர்பாக, ஐ.நாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் விவாதங்கள் இடமபெற்று வருகிறது, இந்த நிலையில் எமது மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விடயம் உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்றை ஆரம்பித்து எமது மக்களின் நிரந்தர தீர்வுக்கான வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.
அதற்காக ஐ.நாவும் அது சார்ந்த நாடுகளும் இந் சர்வதேச விசாணைக்காக தமது முன்னெடுப்புகளையும் ஆதரவுகளைம் வழங்குமாறு நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் கோரி நிக்கின்றோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
45 minute ago
17 May 2025