Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இதுவரை நடக்காத சர்வதேச விசாரணையை நடந்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொய் சொல்லி வருவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊரோடு உறவாடுவோம் கலைப் பிரிவினரின் விளையாட்டு நிகழ்வில் பங்கெடுத்த வீரங்கனைகளை கௌரவிக்கும் நியகழ்வு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில், இன்று (25) நடைபெற்றத. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்காவுக்கான பயணத் தடையை ஐ.நா வின் விசாணைகளுக்கு அமைய எடுக்கப்படுள்ளதாக ஒரு தரப்பு கூறி வருகிறதெனவும் ஆனால் அதுவல்ல உண்மையெனவும் தெரிவித்தார்.
சீனா சார்பில் இருந்து விலகாமல் ஐரோப்பிய நாடுகளின் வட்டத்துக்குள் வராது விட்டால், ஷவேந்திர சில்வாவுக்கு மட்டுமல் ராஜபக்ஷவுக்கும் இந்த நிலை தான் ஏற்படுமெனவும் அமெரிக்கா சொல்லியுள்ளதாகவும் கூறினார்.
விசாரணைகள் இடம்பெற வேண்டியது தொடர்பான அறிக்கை ஒன்றை மாத்திரம் ஐ.நா வெளியிட்டதெனவும் அதனை சர்வதேச விசாரணை இடம்பெற்றுவிட்டதாக ஒரு தரப்பு பொய்களை கூறிவருகிறதெனவும், கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
41 minute ago