Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள சந்தையை, நிரந்தரமாக அமைத்துத் தாருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுவரை காலமும், விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை, 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இரணைமடு சந்தை மற்றும் 6 கிலோமீற்றரில் தொலைவில் உள்ள கிளிநொச்சி சந்தைகளுக்கு கொண்டுசென்றே சந்தைப்படுத்த வேண்டியிருந்தது. அதேவேளை, தமது அன்றாடத் தேவைகளுக்காக, குறித்த சந்தைகளுக்குச் சென்றே, பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டி காணப்பட்டது.
இந்நிலையில், அதிக குடும்பங்கள் வசிக்கும் தமது கிராமத்துக்கான சந்தை ஒன்றை அமைக்குமாறு, பலமுறை கோரிக்கை விடுத்திருந்த பொதுமக்கள், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எவரும் முன்வராத நிலையில், குறித்த பகுதியில் தற்காலிகச் சந்தை ஒன்றை அமைத்தனர்.
இந்நிலையில், குறித்த தற்காலிக சந்தை அமைந்துள்ள காணியானது, கூட்டுறவுச் சபையினருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதென, பிரதேச செயலாளரினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, தமது கிராமத்துக்கான சந்தை அமைப்பதற்கு குறித்த பகுதியை ஒதுக்கி தருமாறும் இல்லையேல், பொருத்தமான பகுதி ஒன்றை தமக்கு தந்து, தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவுமாறும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025