Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வீதியில் சென்ற பாதாசாரி ஒருவரை மோதிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வட பிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சாரதியை, எதிர்வரும் மே 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், இன்று (25) உத்தரவிட்டது.
கோப்பாய், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சென்ற பாதாசாரியை மோதியக் குற்றச்சாட்டிலேயே, குறித்த பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட சாரதி இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, “விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபரான சாரதி இதே குற்றத்துக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றால் அபராதம் விதிக்கப்பட்டது" என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
இதையடுத்து, சாரதி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், பிணைக் கோரிக்கையை சிராகரித்து, சாரதியை வரும் மே 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
13 minute ago
45 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
45 minute ago
59 minute ago