Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று (08) வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வை பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் ஊடகங்களுக்கு தெவித்துள்ளனர்.
தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை (06) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அன்றைய தினம் அளுநர் யாழ்ப்பாணம் இல்லாத காரணத்தினால் சந்திக்க முடியாது எனவும், 8ஆம் திகதி ஆளுநரை சந்திக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர்.
இதன் அடிப்படையிலேயே இன்றையதினம் சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
21 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
33 minute ago
2 hours ago