ஆர்.மகேஸ்வரி / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டீ.கே.ஜி.கபில
போலி ஆவணங்களைத் தயாரித்து சிங்கப்பூர் செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்- பருத்திதுறையைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் பயணப்பொதியை பரிசோதித்த போது, அதில் சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கான விமான பயணச்சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இளைஞரிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட கடற்படையினரால் வழங்கப்படும் அடையாள அட்டையுடன் கூடிய புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த இளைஞர் விமானநிலைய குற்றவிசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
13 minute ago
24 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
3 hours ago
3 hours ago