Niroshini / 2021 நவம்பர் 07 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
தமிழரின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள பௌத்த மயமாக்கலை மேற்கொள்வதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தீவிரமாக வேலை செய்கின்றார் என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்பா.கஜதீபன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கோட்டாபய அரசாங்கம் அத்தியாவசிய பொருள்களின் விலைகளை இரண்டு, மூன்று மடங்காக அதிகரித்து, மக்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குட்படுத்தி உள்ள நிலையில், சிங்கள மக்களின் கடும் எதிர்ப்பை சமாளிப்பதற்கும் மக்களை திசை திருப்புவதற்கும் தனி பௌத்த சிங்களம் என்ற கோட்பாட்டை கையில் எடுத்துள்ளது என்றார்.
அதிலொரு பகுதியாகத்தான் தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, வடக்கில் முகாமிட்டு, தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் உள்ளதாக அடையாளப்படுத்த முற்படுகின்றார் எனவும், அவர் தெரிவித்தார்.
அதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தீவிரமாக வேலை செய்வது வெட்கக்கேடானது எனத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு துணை போகக்கூடாது என்றுதான் இந்த விடயங்களில் பங்கெடுக்காமல் பின்நிற்கின்றார் என்று எண்ணுவதாகவும் கூறினார்.
ஆனால் அங்கஜன் இராமநாதன் எமது மக்களை முட்டாள்கள் என நினைத்து இவ்வாறான செயல்களை செயவதொன்றும் வேடிக்கையான விடயமல்ல எனத் தெரிவித்த அவர், அவர் தனது வியாபாரத்துக்காக தமதுமக்களை மட்டுமல்ல, தமிழர்களின் அடையாளங்களை கூட மாற்றுவதற்கு துணைபோவார் என்பது சாதாரணமானது எனவும் கூறினார்.
எனவே, எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களை விட்டுக்கொடுக்க கூடாது என்று காரைநகரில் துணிவுடன் செயற்பட்டது போன்று அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பா.கஜதீபன் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025