2025 மே 12, திங்கட்கிழமை

சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதுக்கான கலந்துரையாடல்

Editorial   / 2018 ஜூன் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

“முல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும்  சிங்கள குடியேற்றங்களை தடுப்பதுக்கான வழிவகைகளை ஆராய்வதுக்காக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன” என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை பேரவை செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 4 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் குறித்து அவைத்தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதுக்கான வழிவகைகளை ஆராய்வதுக்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு சென்று நிலமைகளை நேரில் பார்வையிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கான அழுத்தத்தை மத்திய அரசாங்கத்துக்கு கொடுப்பதுக்காக மாகாணசபை உறுப்பினர்களும்,  வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் திட்டமிட்டபடி சந்திப்பு இடம்பெறவில்லை. அதனடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட சந்திப்பு எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 4 மணிக்கு வடமாகாணசபை பேரவை செயலக மண்டபத்தில் நடைபெறும்.

இந்த  சந்திப்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதே போல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவேண்டும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X