2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில், வடமாகாணச் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, வடமாகாண சபையில், வியாழக்கிழமை (26) இடம்பெறவுள்ளது.

முல்லையில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக, மாகாணசபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, வடக்கு மாகாணச் சபையினர், முல்லைத்தீவுக்கு நேரடியாகச் செல்வதென்றும் அதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையிலான மாகாண சபை உறுப்பினர்கள், அண்மையில் முல்லைத் தீவுக்குச் சென்று, நிலைமைகளைப் பார்வையிட்டு, அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே, வியாழக்கிழமை (26) இடம்பெறவுள்ள சபை அமர்வுகள் முடிவடைந்தவுடன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, முல்லைத்தீவில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X