Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 29 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த் எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று (28) நடைபெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்றைக்கு எந்த பக்கம் திரும்பினாலும் ஒன்றுபட்ட தரப்பாக ஒற்றுமை பட்ட தரப்பாக தாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிற விடயம் இன்று நேற்றல்ல மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு கொண்டிருக்கின்றது எனவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லை எனவும் கூறினார்.
ஆனால், அதற்காக தாங்கள் இதை கைவிட்டுவிட முடியாது எனத் தெரிவித்த அவர், அன்றைக்கு கட்சியிலே அல்லது கட்சிக்கு உள்ளேயோ ஒரு பிரச்சினை வருகிறது என்றாலும் சரி கட்சிக்கு வெளியிலே ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றாலும் சரி, முதலில் சமாதானம் பேசுகிற ஒரு தூதராக இருந்தவர் தர்மலிங்கம் தான் எனவும் கூறினார்.
"அவருடைய வழித்தோன்றலாக இங்கே இருக்கக்கூடிய சித்தார்த்தனிடம் தமிழ்த் தேசிய இனத்தினுடைய நன்மை கருதி, சிதறிப் போயிருக்கக் கூடிய தமிழர் தரப்புகளை ஒற்றுமைப்படுத்த வேண்டிய தேவை கருதி, அதனுடைய முக்கியத்துவம் கருதி, இன்றைக்கு சகல தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைக்க கூடிய ஆற்றல் இருப்பதாக நான் கருதுகிறேன்.
"ஏனென்றால், எந்தவொரு விடயத்தையும் நிதானமாகவும் பொறுப்பாகவும் செயற்படுத்தி, எல்லோரோடும் நட்போடு பழகக் கூடிய தன்மையும் இருக்கக்கூடிய சித்தார்த்தன், ஒற்றுமை முயற்சியை தலைமை தாங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று, நான் அவரிடம் மிகவும் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
"அதை அவர் நிறைவேற்ற வேண்டும். அதுதான் அவர் தமிழினத்துக்கு செய்யக்கூடிய ஒரு மாபெரும் கடமையாக இருக்கும்" என, மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .