Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 02 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
சிரியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்தக் கோரி மாபெரும் கவனயீர்ப்பும் கண்டனப்போராட்டமும் நாளை சனிக்கிழமை (03) இடம்பெறவுள்ளது.
வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் நாளை சனிக்கிழமை (03) காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் கலந்து கொள்வோருக்காக போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் முன்றலில் இருந்து காலை 8 மணிக்கும் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கும் விசேட பஸ்கள் புறப்படும்.
எனவே போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உரிய நேரத்துக்குள் பஸ்கள் புறப்படும் இடத்துக்கு வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .