2025 மே 19, திங்கட்கிழமை

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய கொள்ளையர்கள் கைது

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 28 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலி.வடக்கில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த பதின்ம வயது சிறுமியையும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பிரதான சந்தேகநபர்களான தெல்லிப்பளையை சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர்,  ஏழாலையை சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர், உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வலி.வடக்கில் கடந்த 20ஆம் திகதி அதிகாலை மூவரடங்கிய கொள்ளை கும்பல் ஒன்று வீடு புகுந்து கொள்ளையிட்டுள்ளனர்.

அதன் போது ஒரு வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெரியம்மா மற்றுமொரு உறவினரான பெண்ணொருவர் என மூவர் இருந்துள்ளனர். அந்த வீட்டினுள் கூரையை பிரித்து உட்புகுந்த மூன்று கொள்ளையர்களும் வீட்டினுள் இருந்த மூன்று பெண்களையும் கட்டி வைத்து விட்டு,  சல்லடை போட்டு தேடுதல் நடத்தி வீட்டில் இருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து சிறுமியை மீட்ட பொலிஸார், சிறுமியை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அத்துடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை (25) வீட்டினை கண்காணித்து கொள்ளையர்களுக்கு தகவல் வழங்கினார் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது சந்தேக நபர் வழங்கிய தகவல்களுக்கமைய பிரதான சந்தேகபர்கள் இருவர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிசார் ,தமது தடுப்பு காவலில் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X