Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மார்ச் 16 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். றொசாந்த்
யாழ்., தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுச் சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மேற்படி சிறுவனுக்கு, ஆசிரியர் ஒருவர் ஓரின பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை புரிந்து வந்த நிலையில் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர், திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (15) ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, வழக்குத் தொடர்பில் விசாரித்த நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்ஸன், ஆசிரியருக்கு பிணை வழங்கினார்.
8 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
6 hours ago