Freelancer / 2022 நவம்பர் 12 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுள்ளார்.
அத்துடன், ஒரு வீடு பகுதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும், 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேரும், யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கபட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். (a)
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
33 minute ago
41 minute ago