2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

’சுகாதார நடைமுறைகளை நடைமுறைப்படுத்த இடையூறு’

Niroshini   / 2021 ஜனவரி 07 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-என்.ராஜ்

சுகாதார அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை செயற்படுத்தும் போது, சில உயர்மட்ட அரசியல் அழுத்தங்கள் காரணமாக தமக்கு இடர்பாடுகள் காணப்படுவதாக, காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி யதுநந்தன் குற்றஞ்சாட்டினார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பு விசேட செயலணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கோவில்களில் இடம்பெறும் உற்சவங்களில் சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கமைய 50 பேர்  மட்டுமே; கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதென்றார்.
'எனவே, அதனை நாம் செயற்படுத்துகின்றோம். அவ்வாறு செயற்படுத்தும் போது ஒரு சில நபர்கள் தமது உயர்மட்ட அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்றனர். அதனால் நமக்கு இடையூறு ஏற்படுகிறது' என்றார்.

இது தொடர்பில் ஏற்கெனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு -ள்ளதாகத் தெரிவித்த அவர், அத்தோடு தொடர்ச்சியாக அநாமதேய தொலைபேசிகள் ஊடாக மிரட்டப்படுவதாகவும் கூறினார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X