Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான், பலாலி பகுதிகளில், சட்டவிரோதமான சுண்ணாம்புக் கல் அகழ்வால் சூழலியல் பிரச்சினை ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
“குறித்த பகுதிகளில் சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படுகின்றபோதும், பொலிஸாரின் துணையுடன், சட்டவிரோதமாக சிலர் பாரிய இயந்திரங்கள் மூலம் கல் அகழ்வில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
“அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட குறித்த பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரே கைதுசெய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர்.
"ஆனால், அச்சுவேலி பொலிஸார், குறித்த நடவடிக்கைகளைக் கண்டும் காணாதது போல் நடந்து கொள்கின்றனர்.
“சுண்ணாம்புக் கல் அகழப்படுவதால், நிலம் கீழிறங்கும் அபாயநிலை காணப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் நிலத்தடிநீர் அற்றுப்போகும் நிலையும் ஏற்படலாம்.
“இவ்விடயம் தொடர்பில், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நேரடிக் கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோத சுண்ணாம்புக் கல் அகழ்வைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .