2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’சுதந்திரமான தேர்தலை நடத்த முயற்சிக்கிறோம்’

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசந்த்

தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த முயற்சிப்பதாக கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் பிரதிநிதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (13) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துரைக்கையில், “எமக்கு தற்போதுள்ள பிரச்சினை கொவிட் 19  பிரச்சினையாகும். இது நாடளாவிய ரீதியிலுள்ள ஒரு பிரச்சினை. உலக சுகாதார ஸ்தாபனம் எப்போது கொவிட் 19 இல்லை என அறிவிக்கின்றதோ அன்றுவரை எமக்கு இந்த கொரானா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் காணப்படும்.

“இந்த நிலையில்,  எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் நாம் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம். அதாவது தனிமைப்படுத்தல் சட்டம், சுகாதார நடைமுறைகள் போன்ற விடயங்களைப் பின்பற்றி  தேர்தலை நடத்த நாங்கள் முயற்சிக்கின்றோம். தேர்தல் திணைக்களமும் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

“பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க, நானும் பொலிஸ் பேச்சாளரும்  வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, தேர்தல் திணைக்களத்துடனும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து தேர்தலை நடத்துவது  தொடர்பில் ஆராயவுள்ளோம். அதேபோல் வவுனியாவுக்கும் செல்லவுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X