2025 மே 10, சனிக்கிழமை

சுதர்சன் மீது தாக்குதல்

Editorial   / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், என்.ராஜ்

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம், இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

நல்லூர் - அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள உறவினரின் கடை தொடர்பில் பிரதேச சபைச் செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்து முரண்பட்டுள்ளார். முரண்பாடு முற்றிய நிலையில் பிரதேச சபைச் செயலாளரை அந்த நபர் தாக்கியுள்ளார்.

தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட போதும், அவரை தடுத்துவைத்த பிரதேச சபை ஊழியர்கள், கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X