2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா, யாழ்ப்பாணம் - அரியாலை கிராமத்தில், வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் செயலாளரும் விழாத் தலைவருமான செ.பத்மநாதன், இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (23) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் அழியக்கூடாதென்ற நோக்கில், இந்த விழாவை நடத்தி வருவதாகவும், 1919ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா, இவ்வாண்டு நூற்றாணிடு விழாவாகக் கொண்டாடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .