Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
2018ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தில் வாசிப்பை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் மிகச் சிறப்பாக செயலாற்றியமைக்காக சுன்னாகம் பொதுநூலகத்துக்கு இம்முறை விசேட தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய வாசிப்பு மாதத்தின் பிரதான விழா, வியாழக்கிழமை(19) காலை, கொழும்பிலுள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
மேற்படி விழாவில் சுன்னாகம் பிரதம நூலகர் திருமதி ஜெயலட்சுமி சுதர்சன், கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடமிருந்து இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
தேசிய வாசிப்பு மாதத்தில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக, சுன்னாகம் பொதுநூலகம் ஏற்கெனவே ஏழு தடவைகள் தேசிய விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025