Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்,எம்.றொசாந்த்
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் திங்கட்கிழமை (16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மருத்துவக் கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் அனைவரும் விக்டோரியா வீதியில் புதிதாகத் திறப்பட்டுள்ள நுழைவாயிலூடாக ( இல.9 B) வருகை தந்து வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற முடியும்.
அதேவேளை இதய சிகிச்சை கிளினிக்கில் சிகிச்சை பெற வருபவர்கள் விக்டோரியா வீதியில் உள்ள வைத்தியசாலையின் 11 ஆம் இலக்க நுழைவாயிலூடாக வருகைதந்து இதய சிகிச்சை கிளினிக்கிற்குச் செல்ல முடியும். இது இதய சிகிச்சை விடுதிக்கு பின்புறம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறும் என்றும் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இதய சிகிச்சை விடுதிக்கு பின்புறம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறும் என்றுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பின்புறமாக இயங்கிய பிரபல தனியார் விடுதி , யுத்தத்தின் பின்னர் இயங்கவில்லை.
வைத்தியசாலையில் போதிய இடவசதிகள் இல்லாத காரணத்தால் , வைத்தியசாலைக்கு அருகில் இருந்த குறித்த விடுதி கட்டடத்தில் கிளினிக் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் , தற்போது விடுதி கட்டட உரித்தாளர்கள் , தம்மிடம் மீள கட்டடத்தை ஒப்படைக்குமாறு கோரியதை அடுத்து , கட்டடத்தை வைத்தியசாலை நிர்வாகம் மீள கையளித்துள்ளது.
38 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
58 minute ago