Freelancer / 2022 ஜூலை 13 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் சுமார் 203 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள், நேற்று(11) மாலை முழங்காவில் கடற்படை முகாம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன், 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
37 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
37 minute ago
49 minute ago
52 minute ago