2025 மே 22, வியாழக்கிழமை

‘சுயமாக வாழும் உரிமையை வழங்க வேண்டும’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மே 01 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரணைதீவு உள்ளிட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவித்து  அந்த மக்கள் தொழில் செய்து சுயமாக வாழும் உரிமையை வழங்க வேண்டும், மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உழைப்பாளர்கள் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, வெளியிடப்பட்ட மே நாள் பிரகடனத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இரணைதீவு முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.

வட்டக்கச்சி விவசாயப் பண்ணை,  பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட மரமுந்திரிகைப் பண்ணை, தென்;னந்தோட்டம், என்பன உள்ளடங்கலாக மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படாது இராணுவத்தினர் வசமுள்ளது. இவை விடுவிக்கப்பட்டு விவசாயிகள் தொழில் செய்து வாழுகின்ற உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உழைப்பாளர்களுக்கு நீதியான விசாரணை மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட உழைப்பாளர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகின்ற இராணுவத்தலையீடுகள் நிறுத்தப்பட்டு  கல்வித்திணைக்களத்தினால் சுயமாக நிர்வாகிக்க இடமாளிக்க வேண்டும்,

கிளிநொச்சி மாவட்டத்தில்  யுத்தத்தினால் சேதமடைந்து காணப்படுகின்ற பரந்தன் இராசாயனக்கூட்டுத்தாபனம் மற்றும் குறிஞ்சாத்தீவு, உப்பளம்  ஆகிய கைத்தொழிற்சாலைகளை விடுவித்து உரிய முறையில் இயங்க வைத்து தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவேண்டும்,

கடற்தொழில் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இந்திய இழுவைப்படகுகள் மற்றும் ஏனைய இழுவைப்படகுகளின் சட்டவிரோதத்தொழில்கள் நிறுத்தப்படவேண்டும்,

உள்ளுர் உற்பத்தி விவசாயப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் பாதுகாக்கப்படவேண்டும்,

இராணுவத்தினர் நடத்திவரும் சிகை அலரிப்பு நிலையங்கள் தடைசெய்யப்பட வேண்டும்,

போன்ற விடயங்கள் மே நாள் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X