Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முல்லைத்தீவு மாவட்டத்தின் நீரியல்வளத் திணைக்களம், புதிய வகையில் சுருக்கு வலைகளுக்கான அனுமதிகளை வழங்குதல் தொடர்பாக கடற்றொழில் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 101ஆவது அமர்வு இன்று (10) நடைபெற்றபோது உறுப்பினர் து. ரவிகரனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நீரியல்வளத் திணைக்களம் புதிய வகையில் சுருக்கு வலைகளுக்கான அனுமதிகளை வழங்குகின்றது. அனுமதி வழங்கப்பட்ட சுருக்குவலை தொழில்முறைகள் சரியாகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. இவைகளைப் பார்க்கும் போது சட்டவிரோத செயல்களுக்கு மறைமுகமாக ஊக்குவிப்பு வழங்கப்படுவதாகவே மீனவ சமூகம் கருதுகின்றது.
மீன்பிடி முறைமைகள் தெரியாதவர்கள் தான் அந்தத் துறைகளில் நியமிக்கப்படுகின்றார்களா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நாடகமாடுகின்றார்களா? என எண்ணத் தோன்றுகின்றது.
எனவே தயவு செய்து மீனவ சமூகத்தை ஒடுக்காத வகையில் பிழையான அனுமதிகளுடன் விதிமுறைகளோடு ஒத்த தொழில்முறைகளை மீனவர்கள் செய்யவும், நீதியான செயல்களில் மாவட்ட நீரியல்வளத் திணைக்களங்கள் ஈடுபடவும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago