2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

சுலக்சன்,கஜன் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று (20) மாணவர்களால் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைகழக கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி நிகழ்வுகள்; இடம்பெற்றன.

நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பொலிஸார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .