Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
A.K.M. Ramzy / 2020 நவம்பர் 17 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலி.மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை மற்றும் குடாக்கனை கசிப்பு உற்பத்தி, வலி.மேற்கு பொலிஸாரின் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கண்டித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுழிபுரம் சந்தியில் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவது எனவும் வலி.மேற்கு சபையில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதில் வட்டுக்கோட்டை பொலிஸார் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டுசெல்வது என வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுழிபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இரட்டைப் படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியுமாக இருந்த போதிலும் பொலிஸார் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாத காரணத்தாலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது எனவும் சபையில் தெரிவிக்கப்பட்டது. பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டுக்கு சபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வலி.மேற்கு பிரதேச சபையின் 33 ஆவது அமர்வு நேற்று (16) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சுழிபுரம் - குடாக்கனையில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இப்பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாலேயே அடிக்கடி இவ்வாறான படுகொலைகள் இங்கு நடைபெறுகின்றன என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago