Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
செல்வநாயகம் கபிலன் / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். மணியந் தோட்டப் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டை, சிவில் புலனாய்வு அமைப்பொன்று மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
மேற்படி சம்பவத்தை, கடற்படையின் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த நபர்களோ அல்லது இராணுவத்தின் புலனாய்வு அமைப்புகளைச் அல்லது பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிவில் புலனாய்வாளர்களோ மேற்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மாறாக, பொலிஸார் இதனைச் செய்திருக்க மாட்டார்கள் என உறுதியாக கூறமுடியாது எனத் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். பொலிஸ் நிலையத்திலுள்ள ஆயுதக் களஞ்சியப் பெட்டியிலுள்ள ஆயுதங்களிலுள்ள தோட்டாக்கள் அனைத்தும் எண்ணிக்கை அடிப்படையில் சரியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவத்தை விசாரணை செய்வதற்கென விசேட பொலிஸ் குழுவொன்று நாளை யாழ் செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. யாழில் தங்கி நின்று விசாரணை மேற்கொள்ளவுள்ள குறித்த குழு, சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த சம்பவத்தில், 25 வயதுடைய நபர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பலராலும் பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
8 hours ago
8 hours ago
07 Jul 2025