Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
2006ஆம் ஆண்டு, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்ப்பட்ட வள்ளிபுனம், செஞ்சோலை வளாகத்தில் இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான விமானத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் ஏழு பேர் உள்ளடங்களாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெளிச்சியுடன் இன்று (14) அனுஷ்டிக்கப்பட்டது.
அந்த வகையிலே, வள்ளிபுனம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியினரால் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது
குறித்த விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் உறவினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் எனப் பலர் இணைந்து, இந்த நினைவேந்தல் நிகழ்வை உணர்வெளிச்சியுடன் அனுஷ்டித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago