Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவுக்கும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், இன்று (24) நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்த க. மகேசன், தொடர்ச்சியாக இராணுவத்தினர் இந்த மனிதாபிமான செயற்பாடுகளை வடபகுதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் வீடற்றவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள விடயத்தையும் தான் வரவேற்பதாகவும், அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பில், யாழ். மாவட்ட மேலதிகச் செயலாளர் (காணி) எஸ். முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர், இராணுவத்தின் 512ஆவது படைக் கட்டளைத் தளபதி ரத்நாயக்க, பலாலி இராணுவ கட்டளை தலைமையக உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த சந்திப்பின் பின்னர், யாழ். மாவட்டச் செயலாளரால் இராணுவ தளபதிக்கு நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago