2025 மே 15, வியாழக்கிழமை

செம்மணி இந்து மயானம் துப்புரவு

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பல பிரதேச மக்களின் பாவனையில் உள்ள செம்மணி இந்து மயானத்தை அண்டிய பகுதிகளைக் துப்புரவு செய்யும் பணியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செம்மணி இந்து மயானத்தை அண்டிய பகுதிகளில் உள்ள விதிகள், வயல்கள் ஆகிய இடங்களில் வழிப்போக்கர்களால் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்ட நிலையில், அப்பகுதியில் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினர் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். 

இதற்காக நல்லூர் பிரதேச சபையின் ஜேசிபி இயந்திரத்தையும் வலி. கிழக்கு பிரதேசசபையின் குப்பை அகற்றும் உழவு இயந்திரங்களையும் கொண்டு, தொழிலாளர்கள் துரிதகதியில் துப்புரவு பணிகளை முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .