2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கணினி மயப்படுத்தப்படும்’

Niroshini   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும், விரைவில் கணினி மயப்படுத்தப்படும் என, யாழ் மாநகர மேயர் வி. மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ அலுவலக இணையத்தளம், யாழ்ப்பாண பொதுநூலக கேட்போர் கூடத்தில் வைத்து, இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாநகர ஆணையாளரால், இந்த இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில், யாழ். மாநகர சபை உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ். மாநர சபை தொடர்பான சகல தகவல்களையும் சேவைகளையும் பொதுமக்கள், இந்த இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாநகர சபையின் செயற்பாடுகளை முற்றுமுழுதாக இணையவழிமூல கணினி மயப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்றார்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்தின் மிக காத்திரமான பணியின் ஒரு பகுதியை  இன்று  நாங்கள் அடைந்துள்ளோம் எனவும், மேயர் கூறினார்.

அத்துடன், எதிர்காலத்தில், யாழ். மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு,  இணையத்தின் ஊடாக,  பொதுமக்கள் தமது சேவையை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ளக் கூடியவாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

அதற்குரிய வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையத்தளமானது, பொதுமக்கள் தமக்குரிய சேவையினை வீடுகளில் இருந்தவாறே இணையத்தினூடாக தமக்குரிய முழுமையான சேவைகளைப் பெறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

எனவே, தமது பதவிக் காலம் விரைவில் முடிந்து விட்டாலும், எதிர்வரும் காலத்தில் இந்த மாநகர சபையை பொறுப்பேற்கும் நிர்வாகமானது, முழுமையாக  இணைய மயமாக்கப்பட்ட மாநகர சபையாக  பொறுப்பேற்கும் எனவும், மேயர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .