2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

செயலிழந்த புழுதியாறு குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – மாயவனுார், புழுதியாறு குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் 32 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 08 ஆண்டுகளுக்கு மேலாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால் குடிநீர் வசதியின்மை, வாழ்வாதார வசதியின்மை மற்றும் வறுமை காரணமாக பல்வேறு நெருக்கடிகளை குறித்த பிரதேச மக்கள் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு, மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மலையகத் தமிழ் மக்களே மாயவனூர் பகுதியில் அதிகம் வசிக்கின்றனர்.

அடிப்படை வாழ்வாதார வசதிகள் எதுவும் அற்ற நிலையிலும் தற்போதைய வரட்சி காரணமாக குறித்த பகுதியில் கிணறுகளில் கூடத் தண்ணீரில்லாத நிலை  காணப்படுகின்றது.

2014ஆம் - 2015ஆம் ஆண்டுகளில் வடக்கு மாகாண சபையால் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 320 இலட்சம் ரூபாய் செலவில்  உப உணவு பயிர்ச்செய்கையை நோக்கமாக கொண்டு, மாயவனூர் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனமே தற்போது எவ்வித பயன்பாடும் இன்றிக் காணப்படுகிறது.

இவ்வாறு பெருந்தொகையான நிதியைச் செலவிட்டும் குறித்த கிராமத்தில் வாழும் மக்களுக்கு எந்த நன்மைகளும் ஏற்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X