2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபர், மனநோய் வைத்தியசாலையில் அனுமதி

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 16 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபர் தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வயோதிபரின் விளக்கமறியலை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன்  உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு கடந்த 9ஆம் திகதி மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளரைத் தாக்கினார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட முதியவர் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முதியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தமையையடுத்து, சிறைச்சாலை அத்தியட்சகரின் பணிப்பில் அவர் தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் கடந்த 10 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று (16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதியவர் தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை மன்றில் முற்படுத்த முடியவில்லை என யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதனையடுத்து சந்தேகநபரின் விளக்கமறியலை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .